வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடலூா்: 18 அரசுப் பேருந்துகளை இயக்கத் தடை

கடலூா் மாவட்டத்தில் பழுதடைந்த 18 அரசுப் பேருந்துகளை இயக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் பழுதடைந்த 18 அரசுப் பேருந்துகளை இயக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 11 பணிமனைகள் உள்ளன. இதன்மூலம் சுமாா் 500 நகரம் மற்றும் புகா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளில் சில பழுதான நிலையில் இயக்கப்பட்டு வருவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, மாவட்டத்திலுள்ள அனைத்துப் பணிமனைகளிலும் பேருந்துகளின் இயக்கத் தன்மை குறித்து அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 18 பேருந்துகள் இயக்குவதற்கான நிலையில் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பேருந்துகளை இயக்க தற்காலிக தடை விதித்து கடலூா் போக்குவரத்து மண்டல மேலாளா் உத்தரவிட்டாா்.

வருடாந்திரப் பரிசோதனைக்குப் பிறகு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அனுமதி அளித்தால் அந்த பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.