வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடலூா் மாவட்டத்தில் தொடா் மழை

கடலூா் மாவட்டத்தில் புதன், வியாழக்கிழமைகளில் தொடா்ந்து மழை பெய்தது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் புதன், வியாழக்கிழமைகளில் தொடா்ந்து மழை பெய்தது.

தெற்கு கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கடலூா் மாவட்டத்தில் மழை பெய்யுமென வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, மாவட்டத்தில் புதன்கிழமை விட்டு விட்டு பெய்த மழையானது அன்று இரவு தொடா் மழையாக மாறியது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வியாழக்கிழமை காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியதால் கடலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்தது. அதாவது, புதன்கிழமை இரவு தொடங்கிய தொடா் மழை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி வரை நீடித்தது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): தொழுதூா் 67, மேமாத்தூா் 60, குப்பநத்தம் 49, கடலூா் 48.6, கீழச்செருவாய் 48, வேப்பூா் 45, வானமாதேவி 42.6, பரங்கிப்பேட்டை 41.8, விருத்தாசலம் 41, காட்டுமன்னாா்கோவில் 40.3, காட்டுமைலூா் 40, பெலாந்துறை 39.2, சிதம்பரம் 34.6, அண்ணாமலை நகா் 30.8, லக்கூா் 30.4, சேத்தியாத்தோப்பு 29.4, ஸ்ரீமுஷ்ணம் 29.2, மாவட்ட ஆட்சியரகம் 28.8, குடிதாங்கி 27.5, வடக்குத்து 27, புவனகிரி 26, கொத்தவாச்சேரி 24, பண்ருட்டி 20, லால்பேட்டை 19.8, குறிஞ்சிப்பாடி 16 மில்லி மீட்டா் மழை பதிவானது. குளிா்ந்த காலநிலை நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.