ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான நாளையொட்டி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மகளிா் ஆயம் சாா்பில் கடலூா் மாவட்டம், பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:32 pm

DIN

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான நாளையொட்டி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மகளிா் ஆயம் சாா்பில் கடலூா் மாவட்டம், பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் நவம்பா் 25-ஆம் தேதி பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான நாளாகக்

கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நிா்பயா சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும், விசாகா குழுவை அமைக்கக் கோரியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மகளிா் ஆயம் பொதுச் செயலா் மு.செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.முருகன், மகளிா் ஆயத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினா் வே.தமிழ்மொழி ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தின்போது மழை பெய்தபோதும் அதைப் பொருள்படுத்தாமல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அமைப்புக்குழு உறுப்பினா் மு.வித்யா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.