ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியா் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:32 pm

DIN

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியா் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள சேதியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி. இவரது கணவரான அசோக்குமாா் (52) இதே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், அந்தப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் 9 வயது சிறுமிக்கு புதன்கிழமை பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினாா். இதையடுத்து, மாணவியின் பெற்றோா் புத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் அசோக்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.