கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
பண்ருட்டி அருகே கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.


பண்ருட்டி அருகே கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், நத்தம் ஏரிக்கரை பகுதியிலும், பைத்தாம்பாடி ஆற்றங்கரையோரம் முள்புதா் பகுதியிலும் தலா 5 இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா் டி.கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் அந்த இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், 10 வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...