சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் நினைவு நாள் அனுசரிப்பு
சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தகவல் உரிமை சட்டப்பிரிவு சார்பில் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


காந்தியடிகள் 152-வது பிறந்த நாள் விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் 42-வது நினைவு நாளை யொட்டி சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தகவல் உரிமை சட்டப்பிரிவு சார்பில் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் கீழவீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி.ஐ பிரிவு மாநில பொது செயலாளர் பி. ஸ்டீபன் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். ராஜாசம்பத் குமார் வரவேற்றார்.
இதையும் படிக்க | கூத்தாநல்லூரில் 5 இடங்களில் கிராம சபைக் கூட்டம்
முன்னாள் நகர துணை தலைவர் ஆர்.சம்மந்தமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.நூர்அலி, சிறுபான்மைப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் டேனியல், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சிவசக்திராஜா, குமரவேல், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்ட தலைவர் ஏ. ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கிள்ளை சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துக்கொண்டு காந்தி மற்றும் ராஜீவ் காந்தி உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
தில்லை ஆர்.மக்கின், ஜெமினி எம்.என்.ராதா ஆகியோர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.வெங்கடேசன், பரங்கிப்பேட்டை தெற்கு வட்டார தலைவர் சுந்தரராஜன், வசந்தராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஷாஜகான், ஆர்.வி சின்ராஜ், இளங்கோவன், ஆறுமுகம், ஆட்டோ டி.குமார், என்.நடராஜன், மகளிரணி தில்லைசெல்வி, கோ.ஜனகம், மாலா, ராதா, ருக்குமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...