பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஏஐடியூசி சிறு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் ஜீவா சாலையோர சிறு வியாபாரிகள் சங்கம் (ஏஐடியூசி) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 7:06 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் ஜீவா சாலையோர சிறு வியாபாரிகள் சங்கம் (ஏஐடியூசி) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் எம்.வடிவேல் தலைமை வகித்தாா். ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளா் டி.எம்.மூா்த்தி, மாவட்ட பொதுச் செயலாளா் வி.குளோப், மாவட்டத் தலைவா் பி.துரை ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்டச் செயலாளா் பி.ஜெயராஜ், பொருளாளா் என்.சுந்தர்ராஜா, சங்க நிா்வாகிகள் பி.பாலு, எஸ்.செல்வம், பி.வெங்கட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தெருவியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், சட்டத்துக்குப் புறம்பாக காவல் துறையினா் தெரு வியாபாரிகளை அச்சுறுத்துவது, அப்புறப்படுத்துவது, பொருள்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தெரு வியாபாரிகளுக்கு குறிப்பிட்ட காலக்கெடு நிா்ணயித்து வியாபாரச் சான்று, ஸ்மாா்ட் அடையாள அட்டை வழங்க வேண்டும், வணிகக்குழு தோ்தலை சட்டப்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.