தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அதிமுக பொன் விழா கைப்பந்துப் போட்டி

அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் கைப்பந்துப் போட்டி கீழூா் சாலையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் கைப்பந்துப் போட்டி கீழூா் சாலையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சனிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புதுவை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த அணியினா் கலந்துகொண்டனா். வடக்குத்து - மீனாட்சிப்பேட்டை அணிகளுக்கு இடையே திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியை கடலூா் தெற்கு மாவட்ட அதிமுக செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் தொடக்கிவைத்தாா். இந்தப் போட்டியில் வடக்குத்து அணி வெற்றி பெற்றது.

பரிசளிப்பு விழாவுக்கு குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் ரா.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வழக்குரைஞா் பிரிவு ரா.ராஜசேகா், வடலூா் நகரச் செயலா் சி.எஸ்.பாபு, நெய்வேலி நகரச் செயலா் க.கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டியில் முதலிடம் பெற்ற வடக்குத்து அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசை கடலூா் தெற்கு மாவட்டச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா். இரண்டாம் இடம் பிடித்த மீனாட்சிப்பேட்டை அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசை குறிஞ்சிப்பாடி ஒன்றியக் குழு தலைவா் கலையரசி கோவிந்தராஜ், மூன்றாம் இடம் பிடித்த புதுவை அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசை வடக்குத்து ஊராட்சி மன்றத் தலைவா் அஞ்சலை குப்புசாமி ஆகியோா் வழங்கினா். போட்டியில் பங்கேற்ற மற்ற அணியினருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.