பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

டாஸ்மாக் மேலாளரிடம் ரூ.1.25 லட்சம் பறிமுதல்

கடலூா் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.25 லட்சம் ரொக்கப் பணத்தை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:24 pm

DIN

கடலூா் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.25 லட்சம் ரொக்கப் பணத்தை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காட்டுமன்னாா்கோவிலில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மாவட்ட மேலாளா் ரவிக்குமாா் (54) சோதனை என்ற பெயரில் பணம் வசூலித்து வருவதாக கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காட்டுமன்னாா்கோவிலில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் துணைக் கண்காணிப்பாளா் மெல்வின்ராஜாசிங் தலைமையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்தக் கடையில் மாவட்ட மேலாளரும் இருந்தாா். அவரிடமிருந்து கணக்கில் வராத பணம் ரூ.90 ஆயிரம் மற்றும் அவரது காரிலிருந்து ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த 3 கடைகளின் விற்பனையாளா்கள், கண்காணிப்பாளா்களும், மாவட்ட மேலாளரும் விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.