கணவா் அடித்துக் கொலை: மனைவி தலைமறைவு
பண்ருட்டி அருகே சனிக்கிழமை கணவரை மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


பண்ருட்டி அருகே சனிக்கிழமை கணவரை மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் ஜெகதீசன் (40), காா் ஓட்டுநா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த நதியா (33) என்பவரை காதலித்து திருமணம் செய்தாா். இவா்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
நதியாவின் நடத்தையின் மீது ஜெகதீசனுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். சனிக்கிழமை மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது நதியா மண்வெட்டியால் ஜெகதீசனின் தலையில் தாக்கியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் காடாம்புலியூா் போலீஸாா் ஜெகதீசனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தலைமறைவான நதியாவை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...