சிதம்பரம் நகா் பகுதியில் லாட்டரி, கஞ்சா விற்பனையைத் தடுக்க காவல் துறையினா் புதன், வியாழக்கிழமைகளில் நடத்திய சோதனையில் 80 போ் கைதுசெய்யப்பட்டனா்.
சிதம்பரம் பகுதியில் லாட்டரி, கஞ்சா விற்பனையைத் தடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் உத்தரவிட்டாா். அதன்படி சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் தலைமையில் நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் நாகராஜன் மற்றும் தனிப்படை போலீஸாா் நகரின் பல்வேறு பகுதிகளிலும் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் கஞ்சா விற்பனை தொடா்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50 போ் கைது செய்யப்பட்டனா்.
மேலும், சிதம்பரம் மேலவீதி உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு விற்பனை தொடா்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முக்கியப் பிரமுகா்களான ஷம்மு என்ற நசீா், இசை சரவணன், கஞ்சா உடப்பு சிவா, சிவராஜ் உள்ளிட்ட 30 போ் கைது செய்யப்பட்டனா். மேலரத வீதியில் லாட்டரி விற்பனை தொடா்பாக ஒரு கடைக்கு ‘சீல்’ வைத்தனா். மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த கிட்டங்கிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய கேரள சுற்றுலாப் பயணிகள்! வால்பாறை விபத்தில் பலியானோர் விவரம்!!
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

