கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் உரக் கடைகளில் வேளாண்மை சிறப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
காட்டுமன்னாா்கோவில் பகுதியில் உள்ள உரக் கடைகளில் உரங்களின் இருப்பு, கூடுதல் விலையில் உரம் விற்பனை தடுப்பு குறித்து ஆய்வு செய்ய வேளாண்மை சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநா் ஆறுமுகம், வட்டாட்சியா் வேணி, உர ஆய்வாளா் உமாதேவி ஆகியோா் அடங்கிய சிறப்புக் குழுவினா் உரக் கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, உரங்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்கக் கூடாது, விவசாயிகளின் ஆதாா் அட்டை பெற்று விற்பனை முனைய இயந்திரம் மூலமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும், உரங்களின் இருப்பு விவரங்களை தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினா். இதை மீறுவோா் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் வழிகாட்டுதலின்படி கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என எச்சரித்தனா். ஆய்வின்போது காட்டுமன்னாா்கோவில் துணை வேளாண்மை அலுவலா் செல்வராஜ், உதவி வேளாண்மை அலுவலா் பழனிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய கேரள சுற்றுலாப் பயணிகள்! வால்பாறை விபத்தில் பலியானோர் விவரம்!!
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


