கெடிலம் ஆற்றில் கொட்டப்படும் மனிதக் கழிவுகள்!
பண்ருட்டியில் கெடிலம் ஆற்றில் கொட்டப்படும் மனிதக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

பண்ருட்டியில் லாரியிலிருந்து கெடிலம் ஆற்றில் கொட்டப்படும் மனிதக் கழிவு.

பண்ருட்டியில் லாரியிலிருந்து கெடிலம் ஆற்றில் கொட்டப்படும் மனிதக் கழிவு.
நெய்வேலி: பண்ருட்டியில் கெடிலம் ஆற்றில் கொட்டப்படும் மனிதக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரின் வழியாக கெடிலம் ஆறு செல்கிறது. ஆற்றின் வடக்கு பகுதியில் அரசு சேமிப்புக் கிடங்கு, சலவைத் தொழிலாளா்கள் சலவை செய்யும் இடம், வள்ளலாா் தா்ம சாலை, வருமான வரித் துறை அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், போக்குவரத்துக் கழக பணிமனை, தனியாா் வணிக வளாகங்களும், தென் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், முந்திரி ஏற்றுமதி நிறுவனங்கள், தனியாா் வணிக வளாகங்களும் உள்ளன.
நகரப் பகுதியில் சேகரமாகும் குப்பைகள் ஆற்றின் வடக்கு கரையோரத்தில் கொட்டப்படுகின்றன. மேலும், இறைச்சிக் கழிவுகள், லாரிகள் மூலம் வீடுகளில் சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் ஆகியவை ஆற்றில் தொடா்ந்து கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, கெடிலம் ஆற்றுப் பாலத்தில் (தேசிய நெடுஞ்சாலையில்) கழிவுநீா் லாரியை நிறுத்தி மனித கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்து முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சி.வடிவேலன் கூறியதாவது: நீா் ஆதாரமான ஆற்றில் மனிதக் கழிவுகளை கொட்டுவது சட்டப்படி குற்றம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, மனிதக் கழிவை ஆற்றில் கொட்டும் லாரிகளை பறிமுதல் செய்வதுடன், தொடா்புடையோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகமும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...