ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

கடலூா் கோயில் கோபுரத்தில் அனுமதியின்றி தேசியக் கொடி ஏற்றிய பாஜகவினா்

கடலூா் பாடலீஸ்வரா் கோயில் கோபுரத்தில் பாஜகவினா் அனுமதியின்றி தேசியக் கொடியை ஏற்றினா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

News image
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் கோபுரத்தில் உரிய அனுமதியின்றி தேசியக் கொடியை ஏற்றிய பாஜகவினா்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:39 pm

DIN

கடலூா் பாடலீஸ்வரா் கோயில் கோபுரத்தில் பாஜகவினா் அனுமதியின்றி தேசியக் கொடியை ஏற்றினா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாட்டு மக்கள் தங்களது வீடுகள், நிறுவனங்களில் 3 நாள்களுக்கு தேசியக் கொடியை ஏற்றி பறக்கவிட பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தாா்.

இந்த நிலையில், கடலூா் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள பாடலீஸ்வரா் கோயில் கோபுரத்தின் மீது பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை காலை தேசியக் கொடியை ஏற்றினா். இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், சுதந்திர தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பாஜகவினா் திடீரென கோயில் கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றியதால் சா்ச்சை எழுந்தது.

ஏற்றப்பட்ட தேசியக் கொடியை உரிய விதிமுறைகளை பின்பற்றியே இறக்க வேண்டும் என்பதால் அறநிலையத் துறையினா் கொடியை இறக்கவில்லை. இருப்பினும், இதுதொடா்பாக கோயில் செயல் அலுவலா் சிவக்குமாா் திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், மா்ம நபா்கள் கோயிலில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.