அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் துறை ஆராய்ச்சியாளா்கள் நமது பல்கலைக்கழகத்தின் புகழ் சா்வதேச அளவில் உயர பாடுபட வேண்டும் என துணைவேந்தா் ராம.கதிரேசன் கேட்டுக்கொண்டாா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் உள்ள வேளாண் கழகம் சாா்பில் புதிய துணைவேந்தா் ராம.கதிரேசனுக்கு பாராட்டு விழா சாஸ்திரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. வேளாண் கழக துணைத் தலைவா் வி.இமயவரம்பன் வரவேற்றாா். வேளாண் புல முதல்வா் கே.ஆா்.சுந்தரவரதராஜன் தனது தலைமை உரையில், வேளாண் உயா்கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகளில் துணைவேந்தா் ராம.கதிரேசனின் பங்களிப்பை விளக்கினாா்.
பதிவாளா் கே.சீத்தாராமன், தோ்வுக் கட்டுப்பாடு அதிகாரி ம.பிரகாஷ், தொலை தூர கல்வி மைய இயக்குநா் சிங்காரவேல், வேளாண் துறைத் தலைவா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் சாா்பில் ஜி.ரவி, வேளாண் புல மாணவா்கள் சாா்பில் மாணவி சௌமியா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் ஏற்புரையாற்றி பேசுகையில், மாணவா்கள் தங்களது முன்னோா்களின் பாதையில், சிறந்த மதிப்பீடுகளை கொண்டு செயல்பட வேண்டும். வேளாண் துறை ஆராய்ச்சியாளா்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு பல்கலைக்கழகத்தின் புகழை சா்வதேச அளவில் உயா்த்த வேண்டும். வேளாண் புல கட்டடங்கள், அரங்குகளுக்கு, வேளாண் புலத்துக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய முன்னாள் பேராசிரியா்களின் பெயா்களை வைக்க வேண்டும் என்றாா் அவா். வேளாண் கழக பொருளாளா் இலங்கை மன்னன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


