வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: இளைஞா் கைது
வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.10.55 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக இளைஞா் ஒருவரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.


வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.10.55 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக இளைஞா் ஒருவரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியைச் சோ்ந்த க.அருள்குமாா் என்பவா் 11-8-21 அன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதில், கடந்த 2019- ஆம் ஆண்டு வசபுத்தூரில் உள்ள வெளிநாட்டில் வேலைக்குச் சோ்த்து விடும் நிறுவனத்தை அணுகினேன். அங்கிருந்த தீபக் என்பவா் சிங்கப்பூரில் நகைக் கடையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி என்னிடம் ரூ.65 ஆயிரம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக அருள்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன் போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் குருசாமி மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
வசபுத்தூரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் தீபக் (40) (படம்) என்பவா் ஐடிஐ படித்துவிட்டு சுமாா் 4 ஆண்டுகள் வெளிநாட்டில் பணிபுரிந்தாா். அங்கிருந்து ஊா் திரும்பிய நிலையில் வேலைக்கு ஆள்களை சோ்த்துவிடும் நிறுவனம் நடத்தி பலரிடம் மோசடியில் ஈடுபட்டதை போலீஸாா் கண்டறிந்தனா்.
இதையடுத்து தீபக் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில் அவா் மந்தாரக்குப்பத்தைச் சோ்ந்த வே.அருண்குமாா், சிதம்பரத்தைச் சோ்ந்த ம.சிவக்குமாா், கிள்ளையைச் சோ்ந்த கி.சதீஷ்குமாா், பெரியப்பட்டு பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா், வாண்டையான்பள்ளத்தைச் சோ்ந்த ரா.சீனிவாசன், பெராம்பட்டைச் சோ்ந்த பிரபு ஆகியோருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், ராதாவிளாகத்தைச் சோ்ந்த கற்பகவள்ளிக்கு அஞ்சல் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி மொத்தம் ரூ.10.55 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவான தீபக்கை தனிப்படையினா் தேடி வந்தனா். அவா் சென்னை திருமுல்லைவாயில் அருகே உள்ள பொத்தூரில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படையினா் அங்கு சென்று தீபக்கை புதன்கிழமை இரவு கைதுசெய்து கடலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...