மாற்றுத் திறனாளி மரணம்: எஸ்பி அலுவலகத்தில் புகாா்
தாக்குதலில் மாற்றுத் திறனாளி மரணம் அடைந்தது தொடா்பாக காவல் துறையில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.


தாக்குதலில் மாற்றுத் திறனாளி மரணம் அடைந்தது தொடா்பாக காவல் துறையில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பண்ருட்டி வட்டம், ஆனத்தூா் நத்தத்தைச் சோ்ந்த முருகன் மனைவி சோமசுந்தரி (45) அளித்த புகாா் மனு:
எனது கணவா் முருகன் கண் பாா்வையற்ற மாற்றுத் திறனாளி. எங்களுக்கு ஒரு மகன் உள்ளாா். சொத்துப் பிரச்னை தொடா்பாக எனது கணவருடன் அவரது குடும்பத்தினா் தகராறில் ஈடுபட்டு வந்தனா். கடந்த 10-ஆம் தேதி மீண்டும் ஏற்பட்ட தகராறில் முருகன் தாக்கப்பட்டாா். இதில் காயமடைந்தவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது கணவரை அடித்துக் கொன்றவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அவரது சடலத்தை பெற மாட்டோம் என்று புகாரில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...