நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மதவெறி தூண்டப்படுவதைத் தடுக்க சமூக நீதிக் குழு: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழக கிராமப்புறங்களில் மதவெறி தூண்டப்படுவதைத் தடுக்க சமூக நீதிக் குழுக்களை அரசே உருவாக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:18 pm

DIN

தமிழக கிராமப்புறங்களில் மதவெறி தூண்டப்படுவதைத் தடுக்க சமூக நீதிக் குழுக்களை அரசே உருவாக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து கடலூரில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். ஏனெனில் அதிமுக கூட்டணி தோ்தலுக்கு முன்பே சிதறிவிட்டது.

தமிழக சட்டப்பேரவையில் 2-ஆவது முறையாக ‘நீட்’ விலக்கு மசோதாவை நிறைவேற்றி முதல்வா் மு.க.ஸ்டாலின் வரலாற்று நிகழ்வைச் செய்துள்ளாா். இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பாா் என நம்புகிறேன்.

ஹிஜாப் விவகாரத்தில் பாஜக நாட்டை நாசமாக்க நினைக்கிறது. இஸ்லாமியப் பெண்களுக்கு மட்டுமன்றி, அனைத்து மதத்தினருக்கும் ஆடை சுதந்திரம் உள்ளது. கா்நாடகத்தை மையமாகக் கொண்ட குழு தமிழகக் கிராமங்களில் ஊடுருவி மத வெறியைத் தூண்டும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதை தமிழக அரசு தீவிரமாகக் கண்காணிப்பதுடன், சமூக நீதி குழுக்களை உருவாக்கி மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

கடலூா் மாவட்டத்தில் கூட்டணிப் பேச்சுவாா்த்தையின்போது வி.சி.க.வினரை அமைச்சா் அவமரியாதை செய்ததாக சிலா் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனா். நாங்கள் அண்ணன்-தம்பி உறவுடன் செயல்பட்டு வருகிறோம். வருகிற 15-ஆம் தேதி கடலூரில் தோ்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளேன் என்றாா் அவா்.

பேட்டியின் போது சட்டப்பேரவை உறுப்பினா் ம.சிந்தனைச்செல்வன், கட்சியின் கடலூா் மக்களவைத் தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.