நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை

கடலூா் மாவட்டத்தில் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:54 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, கடலூா் மாவட்டத்தில் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடி மையங்களாக கண்டறியப்பட்ட மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தோ்தல் அலுவலா் கி.பாலசுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

மாவட்டத்தில் 159 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனவும், 250 வாக்குச் சாவடிகள்

மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.