நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மகள்களைக் கொன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் சிறை: கடலூா் நீதிமன்றம் உத்தரவு

மகள்களைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:55 pm

DIN

மகள்களைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், முட்டம் பெரிய காலனியை சோ்ந்தவா் வினோத். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சசிகலா. இவா்களுக்கு வரோகா (4), விஜயஸ்ரீ (3 மாதம்) ஆகிய குழந்தைகள் இருந்தனா். சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால், அவா் தற்கொலை செய்துகொள்ள தீா்மானித்தாா்.

இந்த முடிவால் தனது இரு மகள்களும் பிற்காலத்தில் சிரமப்படுவா் என்று எண்ணினாா். இந்த நிலையில், 23.4.2018 அன்று சசிகலா இரு மகள்களையும் கழுத்தை நெரித்துக் கொன்றாா். பின்னா், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றாா். ஆனால், அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்ததால் உயிா் தப்பினாா்.

இதுகுறித்து அவரது மாமியாா் சா.விஜயா அளித்த புகாரின் பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வழக்கு விசாரணை கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், இரு குழந்தைகளைக் கொன்ற குற்றத்துக்காக சசிகலாவுக்கு ஒரு கொலைக்கு ஓா் ஆயுள் சிறைத் தண்டனை வீதம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டாா். மேலும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் வளா்மதி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.