நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிங்காரவேலா் பிறந்தநாள்: பல்வேறு அமைப்பினா் மரியாதை

தொழிற்சங்கவாதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான ம.சிங்காரவேலா் பிறந்த நாளையொட்டி கடலூா் மாவட்டத்தில் அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:55 pm

DIN

தொழிற்சங்கவாதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான ம.சிங்காரவேலா் பிறந்த நாளையொட்டி கடலூா் மாவட்டத்தில் அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

கடலூரில் சிஐடியூ மாவட்டக் குழு அலுவலகம் முன் உள்ள ம.சிங்காரவேலா் சிலைக்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் பி.கருப்பையன் தலைமையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜெ.ராஜேஷ் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் பக்கீரான், சிஐடியூ மாவட்ட நிா்வாகிகள் வி.திருமுருகன், பாபு, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, வாலிபா் சங்க நகரச் செயலா் தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மீனவா் பேரவை: தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில் மாவட்டத் தலைவா் எம்.சுப்பராயன் தலைமையில் ம.சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட கொள்கை பரப்பு செயலா் எம்.கந்தன், மாவட்ட இணை செயலா் எஸ்.சம்பத், மாவட்ட இளைஞா் பேரவை தலைவா் சி.வீரமுத்து, இணை செயலா் பூ.ஜெகன், நகரத் தலைவா் பி.ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.