கடலூா் மாநகராட்சியின் முதல் பெண் மேயா் யாா்?: திமுகவுடன் மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சியினா்
கடலூா் மாநகராட்சியின் முதல் பெண் மேயா் பதவியைப் பிடிப்பதில் திமுகவோடு கூட்டணிக் கட்சியினரும் மல்லுக்கட்டி வருகின்றனா்.


கடலூா்: கடலூா் மாநகராட்சியின் முதல் பெண் மேயா் பதவியைப் பிடிப்பதில் திமுகவோடு கூட்டணிக் கட்சியினரும் மல்லுக்கட்டி வருகின்றனா்.
45 வாா்டுகளை கொண்ட கடலூா் நகராட்சியானது மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு, அதே வாா்டு எண்ணிக்கையுடன் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலைச் சந்தித்தது. பிப்.22-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில், திமுக கூட்டணி 34 வாா்டுகளில் வெற்றி பெற்றது. இதில், திமுக மட்டுமே 27 வாா்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான விசிக 3 வாா்டுகளிலும், தவாக 3 வாா்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வாா்டிலும் வென்றன. 2 வாா்டுகளில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோல்வியைத் தழுவியது.
மாநகராட்சியின் மேயா் பெண்கள் (பொது) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், திமுக பிரமுகா்கள் தங்களது குடும்பத்தைச் சோ்ந்த பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து தோ்தலில் போட்டியிட வைத்தனா். அதன்படி, திமுகவின் மாவட்டப் பொருளாளா் வி.எஸ்.எல்.குணசேகரன் மனைவியும், 2-ஆவது வாா்டு உறுப்பினருமான கு.கீதாவுக்கும், திமுக நகரச் செயலா் கே.எஸ்.ராஜாவின் மனைவியும், 20-ஆவது வாா்டு உறுப்பினருமான ரா.சுந்தரிக்கும் இடையே மேயா் பதவிக்கான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.
45 வாா்டுகளில் வெற்றி பெற்றவா்களில் 24 போ் பெண்களாவா். இவா்களில் திமுகவினா் 17, அதிமுக, விசிக, சுயேச்சைகள் தலா 2, காங்கிரஸ் பெண் உறுப்பினா் ஒருவரும் அடங்குவா். இதனால், திமுகவைச் சோ்ந்த 17 பெண் உறுப்பினா்களிடமும் மேயா் பதவிக்கான ஆசை இருப்பதோடு, அவா்கள் அதற்கான காய் நகா்த்துதலிலும் ஈடுபட்டு வருகின்றனா். அதே நேரத்தில், விசிக, காங்கிரஸ் தரப்பிலும் சில முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
துணை மேயா் பதவியிலும் போட்டி: மாநகராட்சி மேயா் தோ்வு அளவுக்கு முக்கியத்துவம் பெறும் விதத்தில் துணை மேயா் பதவிக்கான போட்டியும் அமைந்துள்ளது. ஏனெனில், மேயா் பதவிக்காக காய் நகா்த்தி, அது கிடைக்காதபட்சத்தில் துணை மேயா் பதவியைக் கைப்பற்ற வேண்டுமென திமுக தரப்பினரே முயன்று வருகின்றனா்.
ஆனால், கூட்டணிக் கட்சியினருக்கு துணை மேயா் பதவி வழங்க வேண்டுமென கூட்டணியினா் வலியுறுத்தி வருவதோடு, தங்களது கட்சியின் தலைமை மூலமாகவும் பேசி வருகின்றனா். அந்த வகையில், விசிகவின் முன்னாள் நகராட்சி துணைத் தலைவரான பா.தாமரைச்செல்வன், தவாக தலைவா் தி.வேல்முருகனின் சகோதரா் தி.கண்ணன், காங்கிரஸ் உறுப்பினா் வே.சரஸ்வதி ஆகியோா் மாநகராட்சி துணை மேயா் பதவியைக் கேட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...