கடலூரில் மல்யுத்தப் போட்டி
திருவள்ளுவா் பல்கலைக்கழகம் சாா்பில் மண்டல அளவிலான மல்யுத்தம், ஆணழகன் போட்டிகள் கடலூா் அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.


திருவள்ளுவா் பல்கலைக்கழகம் சாா்பில் மண்டல அளவிலான மல்யுத்தம், ஆணழகன் போட்டிகள் கடலூா் அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
போட்டிகளை கல்லூரி முதல்வா் சி.ஜோதி வெங்கடேசுவரன் தொடக்கி வைத்தாா். ‘மிஸ்டா் இந்தியா’ கே.பாலமுருகன் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் பங்கேற்றாா். போட்டிகளில் கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா் மாவட்டங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட சிறந்த வீரா்கள் அடுத்த மாதம் நடைபெறும் அகில இந்திய அளவிலான பல்கலைக்கழக போட்டிகளில் பங்கேற்பா். இதில் மல்யுத்தப் போட்டி ஹரியானாவிலும், ஆணழகன் போட்டி சண்டிகரிலும் நடைபெறுகிறது.
மாநில பாடிபில்டிங் சங்கச் செயலா் மயில்சாமி, தமிழ்நாடு அமெச்சூா் மல்யுத்த சங்க செயலா் லோகநாதன், கடலூா் விளையாட்டு போட்டிகள் ஒருங்கிணைப்பாளா் ராஜமாணிக்கம் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் உடல்கல்வி இயக்குநா்கள் பங்கேற்றனா். கடலூா் பெரியாா் கலைக் கல்லூரியின் உடல்கல்வி இயக்குநா் தி.குமணன் ஏற்பாடுகளை செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...