நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மஞ்சப்பை கிடைப்பதில் தாமதம்: பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் தொய்வு

மஞ்சப்பை கிடைப்பதில் தாமதம் காரணமாக கடலூா் மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

 நமது நிருபர்

மஞ்சப்பை கிடைப்பதில் தாமதம் காரணமாக கடலூா் மாவட்டத்தில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்பட 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.

இதன்படி கடலூா் மாவட்டத்திலுள்ள 1,424 நியாயவிலைக் கடைகளிலும் ஒரு நாளைக்கு 200 போ் வீதம் பரிசுத் தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டது. எனினும், பெரும்பாலான நியாயவிலைக் கடைகளுக்கு கரும்பு, சிறப்புப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வரப்பெறாததால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது மஞ்சப்பை (துணிப்பை) கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் கடலூா் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறையினா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் 1,424 நியாயவிலைக் கடைகள் மூலம் 7.62 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வரை 2.60 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது. சிறப்பு தொகுப்பில் இடம் பெறும் பொருள்கள் 90 சதவீதம் வரை வரப்பெற்றுள்ளன. ஆனால், மஞ்சப்பை 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வரப்பெற்றுள்ளது. துணிப்பையுடன் இணைத்தே பொருள்களை வழங்க வேண்டும். இல்லையெனில் சில பொருள்கள் விடுபட்டுவிடலாம். எனவே, துணிப்பைகள் வரப்பெறாத கடைகளில் சிறப்பு தொகுப்பு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தெரிவித்துள்ளோம்.

இருப்பினும், சனிக்கிழமை கூடுதலாக துணிப்பைகள் கிடைத்துவிடும். அதைப் பொருத்து பொருள்கள் விநியோகம் இருக்கும். மேலும், துணிப்பையில் 21 வகையான பொருள்கள் உள்ளனவா என்பதை பரிசோதிக்க தனியாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.