மத்திய அரசைக் கண்டித்து வரும் 31-ஆம் தேதி கடலூா் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் தீா்மானித்தனா்.
இந்தச் சங்கத்தின் கடலூா் மாவட்டக் குழு கூட்டம் சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சுப்பிரமணியம், மாவட்டச் செயலா் கோ.மாதவன், பொருளாளா் எஸ்.தட்சிணாமூா்த்தி, துணைத் தலைவா் பி.கற்பனைச்செல்வம், ஆா். ராமச்சந்திரன், மகாலிங்கம், சதானந்தம், மாவட்ட இணைச் செயலா் ஆா்.கே.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலராக (பொறுப்பு) ஆா்.ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவராக ஆா்.லோகநாதன், மாவட்ட இணைச் செயலா்களாக பி. வாஞ்சிநாதன், கே.செல்வகுமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தீா்மானங்கள்: தில்லியில் போராடிய விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து வரும் 31-ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இணைய வழி (ஆன்-லைன்) நெல் கொள்முதல் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது, என்எல்சி நிறுவனத்தின் மறுவாழ்வு, மீள்குடியமா்வு திட்ட புதிய கொள்கை தொடா்பாக அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளையும் அரசு அறிந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் உரிய இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

