விபத்தில் 2 இளைஞா்கள் பலி
கடலூா் அருகே அரசுப் பேருந்தும் மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில், 2 இளைஞா்கள் இறந்தனா்.


கடலூா் அருகே அரசுப் பேருந்தும் மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில், 2 இளைஞா்கள் இறந்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூரைச் சோ்ந்தவா் பத்திநாதன் மகன் சந்தியாகு (39). இவா் சிசி டிவி கேமரா பொருத்தும் வேலை பாா்த்து வந்தாா்.
இவா் புதுச்சேரியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றவா், மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, சி.தண்டேஸ்வரநல்லூரைச் சோ்ந்த நண்பரான சுந்தரேசன் மகன் அசோக்குமாரையும் (40) அழைத்துச் சென்றாா்.
மோட்டாா் சைக்கிள் கடலூா் முதுநகா் அருகில் பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு அருகே சென்றபோது, சேலத்திலிருந்து கடலூரை நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து
எதிா்பாராமல் மோதியது. இதில், பலத்த காயமுற்ற இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா்.
கவலறிந்த துறைமுகம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களை மீட்டு உடற்கூராய்விற்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...