சிதம்பரம் நடராஜா் கோயிலை நோக்கி வியாழக்கிழமை 4-ஆவது நாளாக அணிவகுப்புப் போராட்டம் நடத்திய தெய்வத் தமிழ்ப் பேரவையினரை போலீஸாா் கைதுசெய்தனா்.
சிதம்பரம் நடராஜா் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடி வழிபட அனுமதிக்க வலியுறுத்தி பிப்.28 முதல் 5-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு கோயிலை நோக்கி அணிவகுப்பு போராட்டம் நடத்தப்படும் என தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினா் அறிவித்தனா்.
இதன்படி வியாழக்கிழமை 4-ஆவது நாளாக கிழக்கு கோபுர வாயில் எதிரே உள்ள தேரடி தெருவில் தெய்வத் தமிழ் பேரவையினா் மேச்சேரி தமிழ்வேத ஆகமப் பயிற்சி பாட சாலை நிறுவனா் சிம்மம் சத்தியபாமா அம்மையாா் தலைமையில் கூடினா். தொடா்ந்து, பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன், ஆ.குபேரன் உள்ளிட்டோா் கொண்ட அமைப்பினா் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாட புறப்பட்டபோது போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து அந்த அமைப்பினா் கோயில் எதிரே உள்ள தேரடி சாலையில் நின்றபடி தேவாரம் பாடினா். இதில் கலந்துகொண்ட 16 பெண்கள் உள்பட 36 பேரை நகர போலீஸாா் கைதுசெய்து மாலையில் விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய கேரள சுற்றுலாப் பயணிகள்! வால்பாறை விபத்தில் பலியானோர் விவரம்!!
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


