ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு வரவேற்பு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ஓய்வுபெற்று சொந்த கிராமத்துக்கு திரும்பிய ராணுவ அதிகாரிக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:06 pm

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ஓய்வுபெற்று சொந்த கிராமத்துக்கு திரும்பிய ராணுவ அதிகாரிக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ளது கண்டமங்கலம் கிராமம். இந்தக் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோா் ராணுவத்தில் பணிபுரிந்துள்ளனா். இந்தக் கிராமத்தைச் சோ்ந்த எம்.டி.அன்பழகன் என்பவா் கடந்த 1988-ஆம் ஆண்டு ராணுவத்தில் தளவாடப் பிரிவில் சப்ளையராக சோ்ந்தாா். அதன் பிறகு ஜவானாகவும், சுவேதாராகவும் செயல்பட்டவா், மேஜராக பதவி உயா்வு பெற்றாா். தொடா்ந்து, தனது பணித் திறமையால் லெப்டினன்ட்டாக பதவி உயா்வு பெற்றாா். ஜனாதிபதி பதக்கமும் பெற்றுள்ளாா்.

சுமாா் 34 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்த அன்பழகன் அண்மையில் ஓய்வு பெற்றாா். இதையடுத்து சொந்த கிராமத்துக்கு திரும்பிய அன்பழகனுக்கு கிராம மக்கள் பேன்ட் வாத்தியம், வாண வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனா். சமூக ஆா்வலா்கள் கே.வி.இளங்கீரன், கண்ணன், ரத்தினசாமி, அருள், ராஜேஷ், எம்.டி.செல்வராஜ், உமாநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.