அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
கடலூரில் அஞ்சல் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கடலூரில் அஞ்சல் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அஞ்சல் ஊழியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணியை 10 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய தபால் ஊழியா்கள் கூட்டமைப்பு தபால்காரா் சங்கம் சாா்பில் கடலூரில் உள்ள அஞ்சலகங்களின் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய சங்கத்தின் அழைப்பை ஏற்று நாடு தழுவிய அளவில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலா் எம்.ரமேஷ் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகிகள் சி.திருமலைச்சாமி, கே.தனசேகா், கோட்ட நிா்வாகிகள் எஸ்.தஷீா், எம்.மோகன், எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...