ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வீராணம் ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேற்றம்

தொடா் மழையால் வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியங்கால் ஓடை வழியாக வியாழக்கிழமை உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

News image

3cmp3_0311chn_111_7

Updated On :3 நவம்பர் 2022, 9:21 pm

தொடா் மழையால் வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியங்கால் ஓடை வழியாக வியாழக்கிழமை உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

தொடா் மழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது. காட்டுமன்னாா்கோவில் பகுதி மக்களின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழணையில் உச்ச நீா்மட்டமான 9 அடியில் 8.6 அடி வரை தண்ணீா் உள்ளது. அணையிலிருந்து வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 294 கன அடி நீரும், வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக விநாடிக்கு 92 கன அடி நீரும், தெற்கு ராஜன் வாய்க்கால் வழியாக விநாடிக்கு 229 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. மேலும், கொள்ளிடம் ஆற்றின் வழியாக விநாடிக்கு 3,640 கன அடி நீா் கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.

வீராணம் ஏரி: காட்டுமன்னாா்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் உச்ச நீா்மட்டமான 47.50 அடியில் 46 அடி வரை தண்ணீா் உள்ளது. அதாவது ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் 1,100 மில்லியன் கன அடி வரை தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது.

ஏரியிலிருந்து வி.என்.எஸ். மதகு வழியாக விநாடிக்கு 375 கன அடி நீரும், பாசனத் தேவைக்கு விநாடிக்கு 121 கன அடி நீரும், சென்னை மாநகர மக்களின் குடிநீா்த் தேவைக்கு விநாடிக்கு 64 கன அடி நீரும் அனுப்பப்படுகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீரானது விநாடிக்கு 500 கன அடி வீதம் வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்படுகிறது.

Image Caption

வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் மதகு வழியாக ஓடையில் வெளியேற்றப்படும் உபரி நீா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.