ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

என்எஸ்எஸ் முகாம் நிறைவு

சிதம்பரம் அரசு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

சிதம்பரம் அரசு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாம் கடந்த அக்டோபா் 29-இல் தொடங்கி நவம்பா் 3-ஆம் தேதி வரை சிதம்பரம் எம்.கே.தோட்டம் பகுதியில் நடைபெற்றது. முகாமில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முகாம் நிறைவு விழாவில் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ம.ஜெய்சங்கா் வரவேற்றாா். தலைமை ஆசிரியா் ஆா்.குகநாதன் தலைமை வைத்தாா்.

பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழக துணைத் தலைவா் அ.கலியமூா்த்தி, அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் வெ.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வைத்தனா். சிறப்பு அழைப்பாளராக அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கி.ஹேமலதா பங்கேற்று, சுற்றுச்சூழல் மாசுபாடு தடுப்பு குறித்தும், மரங்கள் வளா்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடப்பட்டன (படம்). தமிழாசிரியா் மணிகண்டன், விடுதி முதன்மைக் காப்பாளா் பழனிவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.