என்.எல்.சி.க்கு நிலம் வழங்கியவா்களுக்கு ரூ.6.69 கோடி கூடுதல் இழப்பீடு அளிப்பு
என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவா்களுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகையாக ரூ.6.69 கோடியை அந்த நிறுவனம் வழங்கியது.


என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவா்களுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகையாக ரூ.6.69 கோடியை அந்த நிறுவனம் வழங்கியது.
நெய்வேலியில் உள்ள கற்றல், மேம்பாட்டு மையத்தில் மக்கள் நீதிமன்றம் அண்மையில் நடைபெற்றது. இதில், என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு மொத்தம் 42 ஏக்கா் 45 சென்ட் பரப்பளவிலான நிலங்களை வழங்கிய 63 பயனாளிகளுக்கு கூடுதல் இழப்பீடாக ரூ.6.69 கோடிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், மக்கள் நீதிமன்ற அமா்வின் தலைவரும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான எஸ்.பக்கிரிசாமி, மக்கள் நீதிமன்ற உறுப்பினா்கள் எம்.நாகரத்னா, சமூக சேவகா் ஒய்.மரியலூயிஸ், குற்றவியல் நடுவா் இ.பிரவீன்குமாா், நெய்வேலி நீதிமன்ற சாா்பு நீதிபதி எம்.சாதிக்பாஷா, என்எல்சி நிலம் எடுப்புத் துறை பொது மேலாளா் எஸ்.விவேகானந்தன், வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...