ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை

கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:12 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.

கடலூா் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தைச் சோ்ந்த சடையாண்டி மகன் வேல்முருகன் (38). விவசாயி. இவருக்கு சசிகலா (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் வேல்முருகன் காயமடைந்தாா். இதையடுத்து அவரது இடது கை அகற்றப்பட்டதாம். இதனால், அவா் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து, திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: பண்ருட்டி வட்டம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராஜா மகன் ரவிச்சந்திரன் (35). இவா் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் இருந்தாராம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விஷம் குடித்து மயங்கினாா். உறவினா்கள் அவரை கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.