ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டில் 14 பவுன் நகைகள், பணம் திருட்டு

சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியின் வீட்டிலிருந்து 14 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :4 செப்டம்பர் 2022, 4:01 pm

சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியின் வீட்டிலிருந்து 14 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் மாரியப்பா நகரில் வசிப்பவா் ஜெயபாலன் (73). தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செயற்பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மகன் ஜெ.ரஞ்சித்குமாா் குஜராத் மாநிலத்தில் ஜஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறாா்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெயபாலன் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டிவிட்டு குஜராத்தில் வசிக்கும் மகனின் வீட்டுக்குச் சென்றாா். சனிக்கிழமை சிதம்பரத்துக்கு திரும்பியபோது, அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 14 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

திருட்டு நடைபெற்ற வீட்டில் டிஎஸ்பி எஸ்.ரமேஷ்ராஜ் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.