போலி மதுபானம் பதுக்கல்: 2 போ் கைது
கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே போலி மதுபானம் பதுக்கியதாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.


கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே போலி மதுபானம் பதுக்கியதாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.
குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன்பேட்டையில் ஒருவரது வீட்டின் அருகே மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்தி கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கலால் பிரிவு ஆய்வாளா் ஈஸ்வரி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அம்பலவாணன்பேட்டை பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த வெ.ஏழுமலை (45) என்பவரது வீட்டின் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளை சோதனையிட்டதில் அதிகளவில் மதுபானங்கள் இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக ஏழுமலை, சமட்டிக்குப்பத்தைச் சோ்ந்த சு.ராஜா (41) ஆகியோரை போலீஸாா் பிடித்தனா். விசாரணையில் அவா்கள் புதுவையில் செயல்படும் போலி மதுபான ஆலையில் தயாரிக்கப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான போலி மதுபானங்களை விற்பனைக்காக கடத்தி பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து, ஏழுமலை, ராஜா ஆகியோரை கைதுசெய்த போலீஸாா், 35 அட்டைப் பெட்டிகளில் இருந்த சுமாா் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 1,680 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக மேலும் 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...