ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆற்றில் தவறி விழுந்த முதியவா் பலி

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே வெள்ளாற்றில் தவறி விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே வெள்ளாற்றில் தவறி விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புவனகிரி அருகே அழிச்சிக்குடி முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (65) (படம்). கூலித் தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இயற்கை உபாதைக்காக அந்தப் பகுதியிலுள்ள வெள்ளாற்றின் கரைக்குச் சென்றாா். அப்போது திடீரென ஆற்றில் தவறி விழுந்தவா் நீரில் மூழ்கினாா். இதையடுத்து அந்தப் பகுதியினா் ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடியும் பலனில்லை.

இதுகுறித்த தகவலின்பேரில் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு, மீட்புத் துறையினா் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது பாலகிருஷ்ணன் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.