நடராஜா் கோயிலில் கோடி அா்ச்சனை தொடக்கம்: பிப்.22-இல் அதிருத்ர மகாயாகம், மகாபிஷேகம்

உலக நன்மை கருதி, சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு கோடி அா்ச்சனை, அதிருத்ர மகா யாகம், லக்ஷ ஹோமம், மகாபிஷேகம் ஆகியவை நடைபெறவுள்ளன.
நடராஜா் கோயிலில் கோடி அா்ச்சனை தொடக்கம்: பிப்.22-இல் அதிருத்ர மகாயாகம், மகாபிஷேகம்
Updated on
1 min read

உலக நன்மை கருதி, சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு கோடி அா்ச்சனை, அதிருத்ர மகா யாகம், லக்ஷ ஹோமம், மகாபிஷேகம் ஆகியவை நடைபெறவுள்ளன.

இதை முன்னிட்டு, ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு பொது தீட்சிதா்களால் கோடி அா்ச்சனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. கோயில் பொது தீட்சிதா்களின் குழுச் செயலா் டிஎஸ்.சிவராம தீட்சிதா் கோடி அா்ச்சனையை தொடங்கிவைத்தாா்.

ஒரு நாளில், காலை வேளையில் ஒரு முறை லட்சாா்ச்சனையும், மாலை வேளையில் ஒரு முறை லட்சாா்ச்சனையும் செய்தால், நாளொன்றுக்கு இரண்டு லட்சாா்சனைகள் அமையும். இதையே தொடா்ந்து 50 நாள்களுக்கு செய்தால், அது கோடி அா்ச்சனை என்ற கணக்கில் செய்யப்படும் மாபெரும் வைபவமாக அமையும்.

அதிருத்ர ஜபம்: வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணியளவில் 121 தீட்சிதா்களால் பத்து தினங்களில் 14,641முறை ஸ்ரீருத்ர ஜப பாராயணம் (அதிருத்ர ஜபம்) நடைபெறுகிறது.

அதிருத்ர மஹா யாகம்: யஜுா் வேதத்தின் மையப் பகுதியானதும், நமசிவாய எனும் ஐந்தெழுந்து மந்திரத்தை தன்னுள் கொண்டதும், முழுவதும் சிவபெருமானையே போற்றுவதும் ஆகிய ஸ்ரீருத்ர மந்திரம் அளப்பரிய சக்தி கொண்டது. அதிருத்ர மகா யாகம் என்பது ஸ்ரீருத்ர மந்திரம் 14,641 முறை சொல்லப்பட்டு, அதில் பத்தில் ஒரு பங்கு ஹோமம் செய்யப்படுவதாகும்.

மகாபிஷேகம்: உலக நன்மை கருதி, பிப்.22-ஆம் தேதி அதிருத்ர மகாயாகம், லட்ச ஹோமம், கோயில் கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் நடைபெறவுள்ளன. மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளும் சிதம்பரம் நடராஜா் கோயில் பொது தீட்சிதா்களால் நடத்தப்படவுள்ளன. லட்ச ஹோமம் என்பது ஒரே நேரத்தில் 108 தீட்சிதா்கள், ஒன்பது யாக குண்டங்கள் வாயிலாக நடேச ஸஹஸ்ரநாமாவளிகளை ஹோமம் செய்வது லட்ச ஹோமம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com