விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சிவசுப்ரமணிய சுவாமிகோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், தட்டாம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசிவசுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
தட்டாம்பாளையம் ஸ்ரீசிவசுப்ரமணிய சுவாமி கோயில் கோபுரத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய சிவாச்சாரியாா்கள்.
Updated On :26 ஜனவரி 2023, 7:56 pm

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், தட்டாம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசிவசுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதிதாகக் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் திருப்பணி வேலைகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை காலை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை காலை 7.30 மணி அளவில் நாடிசந்தானம், சாந்தி ஹோமம், நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் கூறி, கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா்.

இதில், தட்டாம்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். வியாழக்கிழமை இரவு சுவாமி வீதி உலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.