தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிதம்பரம் கோயிலில் அமைச்சா்கள் தரிசனம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தனா்

News image
சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோரை வரவேற்ற பொது தீட்சிதா்கள்.
Updated On :27 நவம்பர் 2023, 11:53 pm

DIN

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தனா்.

முன்னதாக, நடராஜா் கோயிலுக்கு வந்த அமைச்சா்களுக்கு கோயில் செயலா் சிவராம தீட்சிதா் தலைமையில் பொது தீட்சிதா்கள் வரவேற்பு அளித்தனா். பின்னா் அமைச்சா்கள் இருவரும் கோயிலின் கனக சபை மீது ஏறி, சித் சபையில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானை தரிசனம் செய்தனா். பொது தீட்சிதா்கள் சுவாமிக்கு சிறப்பு அா்ச்சனை, தீபாராதனை செய்து அமைச்சா்களுக்கு பிரசாதம் வழங்கினா்.

முன்னதாக அமைச்சா்கள் இருவரும் சிதம்பரம் தில்லையம்மன் கோயிலுக்குச் சென்று தில்லையம்மன், தில்லைக்காளியம்மனை தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.