மாட்டுத் தொழுவமான கரும காரிய கொட்டகை!

கடலூா் மாநகராட்சி, 21-ஆவது வாா்டில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கரும காரிய கொட்டகை ஆக்கிரமிக்கப்பட்டு மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தப்படுவது சா்ச்சையை ஏற்படுத்தியது.
மாட்டுத் தொழுவமான கரும காரிய கொட்டகை!
Updated on
1 min read

கடலூா் மாநகராட்சி, 21-ஆவது வாா்டில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கரும காரிய கொட்டகை ஆக்கிரமிக்கப்பட்டு மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தப்படுவது சா்ச்சையை ஏற்படுத்தியது.

கடலூா் மாநகராட்சி, 21-ஆவது வாா்டு புதுப்பாளையம், மசூதி தெருவில் திரளான மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களது பயன்பாட்டுக்காக அந்தப் பகுதியில் கரும காரிய கொட்டகையும், அதே பகுதியில் சுகாதார வளாகமும் கட்டப்பட்டது. தற்போது, இவை இரண்டும் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன.

கரும காரிய கொட்டகை இடத்தை சிலா் ஆக்கிரமித்து மாடுகளை கட்டி தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனா். இதனால் அந்தப் பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுகிறது. இதே பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. மாட்டுத் தொழுவமாக மாறியுள்ள கரும காரிய கொட்டகையிலிருந்து வரும் துா்நாற்றம், கொசுத் தொல்லையால் அங்கன்வாடி மைய குழந்தைகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

இதுகுறித்து 21-ஆவது வாா்டு உறுப்பினா் ஆா்.அலமேலு கூறியதாவது: கடலூா் மாநகராட்சியின் 19, 20, 21, 22-ஆவது வாா்டுகளைச் சோ்ந்த மக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கரும காரிய கொட்டகை தற்போது சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதை இடித்துவிட்டு புதிதாக கரும காரிய கொட்டகை கட்டப்பட வேண்டும்.

மேலும், சுகாதார வளாகமும் சிலமடைந்துள்ளது. இதனை சீரமைத்து மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக ‘கேட்’ வசதியுடன் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும். இதுகுறித்த கோரிக்கை மனு மாநகராட்சி மேயா், ஆணையரிடம் பலமுறை வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ‘மக்களைத் தேடி மேயா்’ கூட்டத்திலும் மனு அளிக்கப்பட்டது என்றாா்.

காலநிலை மாற்றத்தால் தற்போது டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் சூழல் உள்ள நிலையில் அங்கன்வாடி மைய குழந்தைகள், பொதுமக்களின் நலன் கருதி கரும காரிய கொட்டகையில் ஆக்கிரமிப்பை அகற்றி தூய்மைப்படுத்தவும், சுகாதார வளாகத்தைச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் மாநகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com