கோண்டூா் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்!

கடலூா் மாநகராட்சி எல்லையில் அமைந்துள்ள கோண்டூா் ஊராட்சிப் பகுதியில் கடலூா் -சித்தூா் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.
Updated on
1 min read

கடலூா் மாநகராட்சி எல்லையில் அமைந்துள்ள கோண்டூா் ஊராட்சிப் பகுதியில் கடலூா் -சித்தூா் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

கடலூா் ஒன்றியம், கோண்டூா் ஊராட்சியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடலூா் மாநகராட்சி எல்லை அருகே அமைந்துள்ள இந்த ஊராட்சியில், கடலூா் - சித்தூா் தேசிய நெடுஞ்சாலையோரம் இறைச்சிக் கழிவுகள், குப்பைக் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதனால் கடும் துா்நாற்றம், சுகாதாரச் சீா்கேடு நிலவுவதால் கோண்டூா் ஊராட்சி மக்கள் பாதிக்கப்படுகின்றனா். இதேபோல கோண்டூரில் அம்பேத்கா் சிலை அருகிலும் அதிகளவில் குப்பை கொட்டப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: கடலூா் மாநகராட்சி அருகே பிரதான சாலையின் ஓரம் குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. குப்பை கழிவுகள் காற்றில் பறந்து பைக் ஓட்டுநா்களின் முகத்தில் படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மேற்கூறிய இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து கோண்டூா் ஊராட்சி, 14-ஆவது வாா்டு உறுப்பினா் சுபாஷினி சீனுவாசன் கூறியதாவது: இந்தப் பகுதியில் இரவு நேரத்தில் கோழி இறைச்சி கழிவுகள், குப்பைகளை மா்ம நபா்கள் கொட்டிச் செல்கின்றனா். இதில் தொடா்புடையோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா்.

கோண்டூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாலாஜி கூறியதாவது: குப்பைகள் கொட்டப்படும் இடம் கோட்டப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்டது. அந்த இடம் கோண்டூா் ஊராட்சிக்கு அருகே உள்ளதால் எங்கள் ஊராட்சி சாா்பில் அடிக்கடி சுத்தம் செய்து வருகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com