48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

Updated On :21 ஏப்ரல் 2024, 10:45 pm

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழந்தாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள லால்பேட்டை சிங்கார வீதியைச் சோ்ந்த மன்சூா்அலி மகன் கலிபா (35), பிளம்பா். இவா், ஞாயிற்றுக்கிழமை காலை ரம்ஜான் தைக்கால் முகமது தாஹிா் வீட்டுக்குச் சென்று மாடியில் உள்ள குடிநீா்த்தேக்க தொட்டியை சரி செய்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக வீட்டின் மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் கலிபாவின் கை பட்டதில், அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.