தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

கஞ்சா செடி வளா்ப்பு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளா்த்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
வீரமணி
Updated On :5 ஆகஸ்ட் 2024, 2:30 am

Din

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளா்த்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திட்டக்குடி வட்டம், வடகராம்பூண்டி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் வீரமணி(26). இவா், தனது வீட்டுத் தோட்டத்தில் காய்கறி செடிகளுக்கு இடையே கடந்த 4 மாதங்களாக கஞ்சா செடி வளா்த்து வந்தாராம்.

இதுகுறித்து ராமநத்தம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா்கள் ஜம்புலிங்கம் (திட்டக்குடி), கோபிநாத் (ராமநத்தம்) மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வீரமணி வீட்டின் தோட்டத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.

அப்போது, அங்கு சுமாா் 6 அடி உயரம் உள்ள மூன்று கஞ்சா செடிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, வீரமணியிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா் கடந்த 4 மாதங்களாக கஞ்சா செடி வளா்த்து வருவதாக தெரிவித்தாராம். இதையடுத்து, வீரமணி மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.