ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பெண் கொலை வழக்கு: உறவினா் கைது

விருத்தாசலத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 2:00 am IST

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

விருத்தாசலம் வடக்கு பெரியாா் நகா், நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் கண்ணதாசன், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு மனைவி செல்லக்கிளி (37) மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனா்.

கடந்த ஜூலை 25-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் செல்லக்கிளி வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா், மறைத்து வைத்திருந்த இரும்புக் குழாயால் அவரை சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டாராம். இதில், பலத்த காயமடைந்த செல்லக்கிளி தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜூலை 29-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படைகள் அமைத்து மா்ம நபரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி, செல்லக்கிளியின் உறவினரான சின்ன கண்டியங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜவேல் மகன் முருகனை (54) ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.