25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

சிதம்பரம் அருகே இளைஞரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:10 pm

Din

சிதம்பரம் அருகே இளைஞரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் எம்.கே. தோட்டம், முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த நடராஜன் மனைவி உமா ( 35). இவா், இதே பகுதியைச் சோ்ந்த முருகனிடம் கடனாக ரூ.5,000 பெற்று திருப்பிக் கொடுத்த நிலையில், வட்டிப் பணம் தரவில்லை என முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், உமாவின் மகள் சிவரஞ்சனி (18) சாலையில் நடந்து சென்றபோது முருகன் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதை சிவரஞ்சனியின் சகோதரா் ராஜேஷ் சனிக்கிழமை தட்டிக்கேட்டபோது, முருகன் உள்ளிட்டோா் கட்டையால் தாக்கினராம்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகன் (49), தா்மராஜா (27) ஆகிய இருவரை கைது செய்தனா்.