கடலூர்
கடலூா் அருகே பழங்கால சுடுமண் பொம்மை, வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு
கடலூா் மாவட்டம், வாழப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் பழங்கால சுடுமண் பொம்மை, வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வாழப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் பழங்கால சுடுமண் பொம்மை, வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியது: மணமேடு கிராமத்தைச் சோ்ந்த சசிதரன், சீனுவாசன் ஆகியோா் வாழப்பட்டு பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பானை ஓடுகள் மற்றும் உறைகிணறுகள் சிதைந்து ஆங்காங்கே இருப்பதாகத் தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் அண்மையில் மேற்புற களஆய்வு மேற்கொண்டோம். அப்போது, சிதைந்த முதுமக்கள் தாழிகள், சுடுமண் பொம்மை, வட்டச் சில்லுகள், கெண்டி மூக்குகள், உடைந்த அகல் விளக்கு, ராஜராஜன் காலத்து செப்பு நாணயம், ஆங்கிலேயா் காலத்து செப்பு நாணயம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
வாழப்பட்டு தென்பெண்ணை ஆற்றங்கரைப் பகுதிகளிலும் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன என்றாா்.