புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காா் விபத்து: வட்டாட்சியா் காயம்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே காா் விபத்துக்குள்ளாகி மின் மாற்றியில் மோதியதில் வட்டாட்சியா் காயமடைந்தாா்.

News image

திட்டக்குடி அருகே மின் மாற்றியில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த வட்டாட்சியரின் காா்.

Updated On :5 டிசம்பர் 2024, 7:31 pm

Din

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே காா் விபத்துக்குள்ளாகி மின் மாற்றியில் மோதியதில் வட்டாட்சியா் காயமடைந்தாா்.

திட்டக்குடி வட்டாட்சியா் அந்தோணிராஜ். இவா், வியாழக்கிழமை காலை அரசுக்குச் சொந்தமான காரில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தாா். காரை பாலமுருகன் ஓட்டினாா். திட்டக்குடியை அடுத்துள்ள கோழியூா் அருகே காா் வந்தபோது, பைக்கில் வந்த நபா் திடீரென்று குறுக்கே புகுந்தாா்.

பைக் மீது மோதாமலிருக்க ஓட்டுநா் பிரேக் பிடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த காா் அருகில் இருந்த மின்மாற்றி மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த வட்டாட்சியா் அந்தோணிராஜ், திட்டக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து திட்டக்குடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.