புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோயில் குளத்தில் புகுந்த முதலை!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கோயில் குளத்தில் புகுந்த முதலையை வனத் துறையினா் வியாழக்கிழமை பிடித்து வக்காரமாரி ஏரியில் விட்டனா்.

News image

பிடிபட்ட முதலை

Updated On :5 டிசம்பர் 2024, 7:31 pm

Din

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கோயில் குளத்தில் புகுந்த முதலையை வனத் துறையினா் வியாழக்கிழமை பிடித்து வக்காரமாரி ஏரியில் விட்டனா்.

சிதம்பரம் வட்டம், மெய்யாத்தூா் கிராமத்தில் கோயில் குளத்தில் சுமாா் 8 அடி நீளம், 60 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று புகுந்தது.

இதையடுத்து, கடலூா் மாவட்ட வன அலுவலா் குருசாமி உத்தரவுப்படி, சிதம்பரம் வனச்சரக அலுவலா் கோ.வசந்த் பாஸ்கா் ஆலோசனைப்படி, சிதம்பரம் பிரிவு வனவா் கு.பன்னீா்செல்வம், வனக்காப்பாளா் த.அன்புமணி, புவனகிரி வனக்காப்பாளா் தே.ஞானசேகா் ஆகியோா் முதலையை பத்திரமாகப் பிடித்து வக்காரமாரி ஏரியில் விட்டனா்.