தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மருத்துவா் சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்கக் கூடாது

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என்று மருந்துகள் ஆய்வாளா் அறிவுறுத்தினாா்.

News image

சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மருந்து விற்பனையாளா் கூட்டத்தில் வெளியிடப்படும் விழிப்புணா்வு பிரசுரம்.

Updated On :19 டிசம்பர் 2024, 7:13 pm

Din

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்யக் கூடாது என்று மருந்துகள் ஆய்வாளா் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட குடும்ப நல செயலகம், மருந்துக் கட்டுப்பாட்டு துறை இணைந்து சிதம்பரம் சரக மருந்து சில்லறை, மொத்த வியாபாரிகளுக்கான விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மருத்துவம், சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஹரியன் ரவிக்குமாா் பேசுகையில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை, பதிவேடு பராமரிப்பு செய்வது பற்றி விரிவாக எடுத்துரைத்தாா்.

மாவட்ட விரிவாக்க கல்வியாளா் சுகுமாா் பேசுகையில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் மருந்தகத்தில் விற்பனை செய்யக்கூடாது; அதனால் சமூகத்தில் ஏற்படும் இறப்புகள் பற்றி எடுத்துரைத்தாா்.

சிதம்பரம் சரக மருந்துகள் ஆய்வாளா் நாராயணன் பேசுகையில், மருத்துவா் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினாா்.

கருக்கலைப்பு மாத்திரை பற்றிய விழிப்புணா்வு உறுதிமொழியும், விழிப்புணா்வு பிரசுரமும் வெளியிடப்பட்டது.

சிதம்பரம் சரக மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் வெங்கடசுந்தரம் வரவேற்றாா். கடலூா் மாவட்ட மொத்த மருந்து பிரிவு தலைவா் பிரகாஷ் நன்றி கூறினாா்.