தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அம்பேத்கருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை அளித்தது காங்கிரஸ்: கே.எஸ்.அழகிரி

அரசமைப்புச் சட்டத்தை எழுத வைத்து அம்பேத்கருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது காங்கிரஸ் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:43 pm

Din

அரசமைப்புச் சட்டத்தை எழுத வைத்து அம்பேத்கருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது காங்கிரஸ் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

அம்பேத்கா் தனது அறிவுத் திறனை எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக பயன்படுத்தினாா். அவரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது.

கருத்தியல் ரீதியாக அம்பேத்கருடன் காங்கிரஸ் மாறுபட்டதே கிடையாது. அரசமைப்புச் சட்டத்தை அம்பேத்கரை எழுத வைத்து, அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது காங்கிரஸ்.

சமூக நீதிக்காக போராடிய மிகப் பெரிய தலைவரான அம்பேத்கா் குறித்து பேசி, மன்னிக்க முடியாத தவறை பாஜகவினா் செய்திருக்கிறாா்கள் என்றாா் கே.அழகிரி.